இலட்சங்களில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்
அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய துறைகளில் சம்பளம் திருத்தப்பட வேண்டுமென மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் சம்பள திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே தொழிற்சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உரிய சம்பள திருத்தம் நடைபெறவில்லையென்றால், மத்திய வங்கியின் எஞ்சியிருந்த கணிசமான அதிகாரிகளும் மத்திய வங்கியை விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் மத்திய வங்கியில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சுமார் நூறு அதிகாரிகளை நாம் இழந்துள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களில் சிலர் உலக வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இங்கிலாந்து வங்கி மற்றும் காமன்வெல்த் செயலகம் உட்பட பல சர்வதேச நிறுவனங்களில் சேவையில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி ஊழியர்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், அவர்களின் தொழில் தகைமைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட வருமானத்தை உருவாக்குவதைத் தடுக்கும் சட்டத் தடைகள் மற்றும் பிற வரம்புக் காரணிகள் இருப்பதாகவும் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் தற்போது நிலவும் வரிச்சுமை காரணமாக சில தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதன்மூலம் சம்பளம் திருத்தப்பட வேண்டுமெனவும் சங்கம் வலிறுயுத்தியுள்ளது.
மேலும், அனைத்து தொழிற்சங்கங்களும் மத்திய வங்கி குழுவும் 2024-2026 கூட்டு ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிய கடமைப்பட்டிருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.