இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

rtjy 263

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் சில நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடமாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த திறைசேரி உண்டியல்களின் பெறுமதி 50,000 மில்லியன் ரூபா ஆகும்.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version