இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

24 661df71ac20c1

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

78,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும், 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 23,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version