அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது விடுத்துள்ளாரென தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என அமைச்சரவையில் உள்ள ஒரு தரப்பினரும், மாற்று தேர்வுகளை பற்றி பரீசிலிக்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.
இவ்விவகாரம் உட்பட நிதி நிலவரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே இவ்விருவரும் அழைக்கப்பட்டுள்ளனரென தெரியவருகின்றது.
Leave a comment