இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

24 660036833b1d9

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Exit mobile version