இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

tamilni 346

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஜனவரி மாதம் உற்பத்தி மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் விரிவடைதலை அடைந்துள்ளது.

இதற்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணிகள் நடவடிக்கைகளில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version