மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

tamilni 440

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய இலங்கை மின்சாரசபை திட்டமிட்டுள்ளது.

இதன்படி மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 வீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம்இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மின்சாரக் கட்டணங்களை குறைப்பது குறித்து கடந்த 15ம் திகதி பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறிந்து கொள்ளப்பட்டதன் பின்னர், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பிலான யோசனையை முன்வைக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version