tamilni 97 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபையின் மறுசீரமைப்பு பொது மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும்

Share

மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (05.01.2024) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகுவதாகவும் மின்சார சபையின் சில பிரிவுகளை தனியார் மயப்படுத்தப்பட உள்ளததை அதை எதிர்த்து ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

உண்மையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டும் மறு சீரமைக்கப்பட வேண்டிய விடயங்கள்.

அதாவது இந்த இரண்டு அமைப்புகளும் வருமானம் மற்றும் செலவுகளை பொறுத்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவற்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் காஞ்சன விஜயசேகர அவர்களுடைய வெளிப்படையில்லாத் தன்மை.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேலதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபக் நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் அற விடாமல் இலவசமான முறையில் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் மின்சார சபையிலே நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையிலே மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ தொழிற்சங்க நடவடிக்ககைகள் தொடர்பாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிட கூடாது என குறிப்பிட்டார்.

மின்சார சபையிலே வேலை செய்கின்ற ஊழியர்களை அடக்குமுறைக்குள்ளே கொண்டு செல்கின்றார்கள் ஒருவருக்கும் தெரியாமல் தாங்கள் செய்யப் போகின்ற ஊழல் மோசடிகளுக்கு இவர்கள் வாய் திறக்க கூடாது என்று குறிப்பிடுகின்றார்கள்.இலங்கை மின்சார சபையிலே இருக்கின்ற ஊழியர்கள் உண்மையான நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் நாங்கள் எங்கு சென்று அறிவது.

தற்போது சுகாதாரத் துறையில் எத்தனையோ மோசடிகள் இடம் பெறுகின்றது புற்றுநோய் இருப்பவர்களுக்கு கூட கொண்டு வந்த மருந்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகின்ற அந்த தன்மையுள்ள மருந்து இல்லாமல் ஏற்றப்படுகின்றது.

இவ்வாறான காரணங்களில் தான் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.

இவற்றைவிட, பல கோடிக் கணக்கில் வைப்பில் பணம் உள்ளவர்களிடம் வரி அறவிடாமல் இலகுவாக கஷ்டப்பட்ட மக்கள் மீது வரியை அரசாங்கம் அதிகரித்திருக்கின்றார்கள்.

இதற்கு எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள்.

இதிலே மட்டக்களப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிராக வாக்களித்தவன் நான் ஒருவர் மட்டும்தான்.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 6463b66b7e2da
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் சஜித் பிரேமதாச போட்டி: சுஜீவ சேனசிங்க உத்தியோகபூர்வமாக உறுதி!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் போட்டியிடுவார் என்பதை ஐக்கிய...

24 663887579e266
இந்தியாசெய்திகள்

மது அருந்தப் பணம் இல்லாததால் 2 மாதக் குழந்தையை ரூ. 2.4 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்: ஐதராபாத்தில் அதிர்ச்சி!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாய் ஒருவர், மது வாங்கப்...

IMG 20251217 WA0029 696x392 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் குற்றச்சாட்டு: கிளிநொச்சி மாசார் அ.த.க. பாடசாலை அதிபருக்கு எதிராகப் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் த.ஜெபதாஸ் மேற்கொண்டு வரும் நிதி முறைகேடுகள் மற்றும்...

ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...