tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

Share

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்பொழுது மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் சாத்தியமில்லை என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சக்தி சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் நீக்கப்படாவிட்டால், மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார சக்தி சட்ட மூலம் தொடர்பில் இரண்டு தடவைகள் எழுத்து மூல பரிந்துரை முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உதாசீனம் செய்து, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றின் அனுமதியுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கள் ஏற்படும் என பராக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...