சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு

24 6655a49ef2855

சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நிதி நிறுவனங்கள் அந்த பெறுமதிகளை குறைத்துள்ள போதிலும், இலங்கை மத்திய வங்கியின் அளவு குறைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வேண்டும். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் முன்கூட்டியே நடக்கிறது.

அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். புதிய கடன் வழங்குவதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version