அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி
இலங்கைசெய்திகள்

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி

Share

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படும் ஜனாதிபதி

அண்மையில் நடைபெற்ற மடு திருப்பதி நிகழ்வில் கலந்து கொண்ட போது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் இலாபம் பெற மேற்கொண்ட முயற்சியை இலங்கை கத்தோலிக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்ற மடு மாதாவின் பெருவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 26 வருடகால உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சியை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழர்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்களை அறிவித்தார்.

கொழும்பில் இருந்து வடக்கே சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழர்களின் இதயப் பகுதியில் உள்ள மடு மாதா தேவாலயத்தில் நடைபெற்ற நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் பிறகு விக்ரமசிங்கவின் அறிவிப்புகளை நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.

ஜனாதிபதியின் அறிவிப்புகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தலைமன்னார் மாவட்டத்தில் இருந்து தலைநகர் கொழும்புக்கு நகரங்களுக்கு இடையேயான தொடருந்து சேவை, வடமேற்கு மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் வவுனியாவில் சீனி தொழிற்சாலை நிறுவப்படும் போன்ற விடயங்கள் அடங்கியிருந்தன.

இந்தநிலையில் ஜனாதிபதியின் உரை ‘முற்றிலும் அரசியல்’ என்று கத்தோலிக்க வார இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களிலும் அரசியல்வாதிகள் தோன்றவோ அல்லது உரை நிகழ்த்தவோ அனுமதிக்கக் கூடாது என்று அந்த வார இதழ் கூறியுள்ளது. இதேவேளை கத்தோலிக்க அமைப்புகளின் கூட்டமைப்பும், ஜனாதிபதியின் அரசியல் பேச்சு தொடர்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் அரசியல் திட்டங்களுக்காக புனித பலிபீடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அந்த கூட்டமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

273 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலரைக் காயப்படுத்திய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த விக்கிரமசிங்க தயாராக இல்லை என்று கூட்டமைப்பின் அழைப்பாளர் திலின அழககோன் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...