13 6
இலங்கைசெய்திகள்

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்தவர் கைது

Share

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்தவர் கைது

யாழில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

“அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.

அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

இந்நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இதுகுறித்து சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...