7 41
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

Share

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன தாக்கல் செய்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவில், அரசியல் தேவை காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியான அதிகாரியை நியமிப்பதில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...

Gov Pay 1200x675px 20 10 25 1000x600 1
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புரட்சி: 2 பில்லியன் ரூபா மைல்கல்லை எட்டியது GovPay!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் கட்டணத் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன்...

25 6944be9469388
செய்திகள்உலகம்

பங்களாதேஷ் வன்முறை: இந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது – முகமது யூனுஸ் அறிவிப்பு!

பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம்...

44518c6422f6643ec9efe122a04bc788
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உருக்கமான நன்றி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கிய...