யாழில் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

24 663ea26d7f9ad

யாழில் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

யாழில் (Jaffna) பொதுச் சந்தையொன்றில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொது சந்தையில் சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரக் கேடு மற்றும் சூழல் மாசு என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுச் சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக சுகாதாரச் சீர்கேடு அடிப்படையில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Exit mobile version