இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சி மீது பாய்ந்த வழக்கு : காரணத்தை அம்பலப்படுத்திய சிவமோகன்

Share
7 28
Share

தமிழரசுக் கட்சி மீது பாய்ந்த வழக்கு : காரணத்தை அம்பலப்படுத்திய சிவமோகன்

தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை, இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ம்மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக்கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் எவரையும் நிறுத்துவதற்கு அதிகாரம் இல்லை.

மூலக்கிளை, பிரதேச கிளையில் எவரேனும் தவறு செய்திருந்தால் மாத்திரமே அது தொடர்பான முறைப்பாடு கிடைத்தால் நிறுத்துவதற்கான அதிகாரம் இருக்கின்றது.

அதை விடுத்து மத்திய குழுவில் இருக்கும் யாரையும் நிறுத்துவதற்கு செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

அது தவிர தமிழரசு கட்சி கூட்டம் கூடுவதாக இருந்தால் தலைவரின் கலந்துரையாடலோடு நிகழ்ச்சி நேரலை தலைவரிடம் அனுப்பி அதை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டம் கூடுவதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கூட்டத்தை நடத்தலாம் என தலைவர் கூறியதன் பின்னரே கூட்டம் கூடலாம்.

அத்துடன் தலைவரின் அனுமதிக்கு பின்னரே ஏனையவருக்கும் அந்த நிகழ்ச்சி நிரலையும் கூட்டத்துக்கான அழைப்பையும் அனுப்பலாம்.

இவ்வாறு தான் யாப்பு கூறுகின்றது, தலைவர் கட்சியை வழிநடத்துபவர் செயலாளர் என்பவர் கூறுவதைச் செய்பவராக தான் இருப்பார்.

இவ்வாறு தெளிவாக யாப்பில் கூறப்பட்டுள்ளது எனவே யாப்பை மீறி அனைத்தையும் செயல்படுத்த விட முடியாது அதனை மையப்படுத்தியே யாழ் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...