வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!
இலங்கைசெய்திகள்

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!

Share

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்!

இரத்தினபுரி – அயகம பகுதியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அயகம, தேயிலை கொலனி – பொகஹவன்குவா பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றுமுன் தினம் இரவு (05) வாடகைக்கு செல்வதாக கூறி காரொன்றினை இடைமறித்து இருவர் வாகனத்தில் ஏறியுள்ளனர்.

இதன்போது காரில் சென்றவர்கள் சாரதிக்கு தயிர் கொடுத்துள்ளனர். அதனை பருக சாரதி மறுத்ததால் வலுக்கட்டாயமாக குடிக்க கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் சாரதியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கி முனையில் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக அயகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாரதியின் பணப்பையையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...