காலி பியதிகமவில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: நிவாரண உதவி எடுத்துச் சென்ற வாகனம் பாதிப்பு!

b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5 1

காலி மாவட்டத்தின் பியதிகம புகையிரதக் கடவை ஒன்றில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ள நிவாரண உதவிகளைக் கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காலி புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் இந்தக் கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் வாகனச் சேதம் ஏற்பட்ட போதிலும், கார் சாரதி உட்பட யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

Exit mobile version