ரயில் சேவையின் அனைத்து பதவிகளுக்கும் பெண்கள் ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அனுமதி வழங்கியதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

1737798087 new train service 2

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று சட்டமா அதிபர் இன்று (டிசம்பர் 12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் (Station Master) பதவிகளுக்குப் பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலைச் சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்தக் கொள்கை மாற்றத்தை உயர் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.

அமைச்சரவையின் இந்த அனுமதி மூலம், இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கான பணி வாய்ப்புகள் அனைத்துத் துறைகளிலும் விரிவுபடுத்தப்படுகின்றன.

Exit mobile version