அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

25 67abee737d4d3

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து, தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு, அது சார்ந்த அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஆட்சேர்ப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் ஓர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சும் தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக மேற்குறித்த குழுவுக்குச் சமர்ப்பித்திருந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

2025-11-14ஆம் திகதி நடைபெற்ற அதிகாரிகள் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விதந்துரைகளுக்கமைய, மேற்கண்ட 2,284 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Exit mobile version