கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவகங்களுக்கும் இடையில் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் கருத்திட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கம் சர்வதேச விஞ்ஞான ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் குறித்த ஆய்வு மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதாகும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் உயர்கல்வித் துறை சர்வதேச மட்டத்தில் புதிய ஆய்வு மற்றும் கற்கை வாய்ப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.