புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டயர் வெடித்ததில் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாககியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், தற்போது வாகன சாரதி குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.