10 1
இலங்கைசெய்திகள்

யாழ்.செம்மணியில் நடைபெறவுள்ள போராட்டம்: தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “யாழ்ப்பாணம் அரியாலை சிந்துபாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ”மக்கள் செயல்” என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ”அணையா விளக்கு” மூன்று நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் எதிர்வரும் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.30 முதல் நண்பகல் 1.30 மணி வரை கலந்து கொண்டு எமது கட்சியின் ஆதரவினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.இலங்கை உணவகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகையின் போது நாம் ஒற்றுமையாக இந்த கோரிக்கையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய இந்த கவனயீர்ப்பு மிக முக்கியமானது என்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றது.” என குறிப்பிட்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...