எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (டிசம்பர் 13) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய, மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் இவர் இன்று அதிகாலை 12.30 மணிக்கு டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK-648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவர் கொண்டு வந்திருந்த பயணப் பொதிகளுக்குள் 69 மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த போது, பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த மதுபான போத்தல் தொகையுடன் நாளை மறுநாள் (டிசம்பர் 15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.