tamilnih 4 scaled
இலங்கைசெய்திகள்

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Share

வற் (VAT) வரி அதிகரிப்பு காரணமாக பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி குறைந்த பட்ச பேருந்து கட்டணம் 31 ரூபாவிருந்து 35 ரூபாவாகவும், ஏனைய பேருந்து கட்டணங்கள் 20 தொடக்கம் 25 வீதமாகவும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேருந்துகளின் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் கணிசமான அளவு அதிகரிக்கும் எனவும் பிரியஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வற் வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக பேருந்து தொழிற்துறையை தக்கவைக்க அரசாங்கத்திடம் நிவாரணம் பெற்றுக்கொள்வதை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...

25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...