வெல்லவாய – தனமல்வில பிரதான சாலையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பேருந்தொன்றின் பின் புறத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றையதினம்(24.05.2025) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 6 பேர் தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.