கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து - ஐவர் ஆபத்தான நிலையில்
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – ஐவர் ஆபத்தான நிலையில்

Share

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – ஐவர் ஆபத்தான நிலையில்

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

எதிர்திசையில் பயணித்த பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மற்றையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 100 பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...