மேற்கு ஆபிரிக்க நாடொன்றினால் இலங்கை வர்த்தகர்களுக்கு அழைப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் இடைக்கால ஜனாதிபதி இப்ராஹிம் தாரோர் இலங்கை வர்த்தகர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார்
தனது இலாபகரமான சுரங்கத் துறையில் முதலீடுகளை செய்யுமாறு இலங்கை வர்த்தகர்களுக்கு இப்ராஹிம் தாரோர் இந்த அழைப்பு விடுத்துள்ளார்.
புர்கினா பாசோவில் தங்கம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களின் குறிப்பிடத்தக்க இருப்புக்கள் உள்ளன.
இந்தநிலையில் கென்யாவிலுள்ள இலங்கை தூதுவர் கனகநாதனை அண்மையில் சந்தித்தபோது அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், புர்கினா பாசோவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை தூதுவர் கணநாதன் வெளியிட்டுள்ளார்.