25 2
இலங்கைசெய்திகள்

யாழ். பொது நூலகத்தை நவீனமயமாக்க 100 மில்லியன் நிதி

Share

யாழ். பொது நூலகத்தை நவீனமயமாக்க 100 மில்லியன் நிதி

யாழ்ப்பாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் கீழ், யாழ். பொது நூலகம் மற்றும் ஏனைய பிராந்திய நூலகங்களின் மேம்பாட்டில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நூலகம் ஒன்று தீவைக்கப்பட்டது. அதன் வடு இன்னும் அந்த மக்களின் மனதில் இருக்கின்றது. அதற்கு நாங்கள் நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனவே, அந்த பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்தவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...