rtjy 113 scaled
இலங்கைசெய்திகள்

பௌத்த பிக்குகளால் எழுந்துள்ள அச்சம்

Share

பௌத்த பிக்குகளால் எழுந்துள்ள அச்சம்

முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்திற்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக்கொள்கிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் மஜீத்நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் குரங்குபாஞ்சான் கிராமம் உள்ளது. இது ஒரு விவசாயக் கிராமமாகும்.

விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை காலப்பகுதியில் சர்வதேசம் வரை இக்கிராமம் பற்றி பேசப்பட்டுள்ளது.

இங்கு முழுமையாக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர். இங்கு இராணுவ முகாமொன்று இருந்து தற்போது இராணுவத்தினர் அகன்று சென்றுள்ளனர்.

பல்லாண்டு காலம் சுமூகமாக மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் இவ்வாறு செயற்படுவது இன உறவைச் சீர்குலைக்கும் முயற்சியாக அமைந்து விடும்.

எனவே, அதிகாரிகள் என்ற வகையில் கிண்ணியா பிரதேச செயலாளரும், திருகோணமலை அரசாங்க அதிபரும் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஏ.எல்.அதாவுல்லா எம்.பியும், ஆளுங்கட்சி என்ற வகையில் கிண்ணியாவுக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் இது விடயத்தில் கவனம் செலுத்தி உயர்மட்டத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...