தமிழர் பகுதியில் இரகசிய விகாரை
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதி நோக்கிப் படையெடுக்கும் பிக்குகள்

Share

படையெடுக்கும் பிக்குகள்!

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்புமிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரையானது இன்று (30.06.2023) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...