நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே. அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதையடுத்து எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.
இந்நிலையில், பெலவத்தையிலுள்ள லிட்ரோ முகவரிடம் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்றபோது காஸ் தீர்ந்துவிட்டது.
சளைக்காத அவர் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கும் சென்றுள்ளார். ஆனால் தொடர் ஏமாற்றம்.
இன்றைய நாள் எனக்கு காஸ் வாங்குவதுடனேயே சென்று விடுமோ? என எண்ணிய சமயம் அவருடைய கண்களில் நீலநிற எரிவாயுக்களை ஏற்றிய நீண்ட வண்டி ஒன்று தென்பட்டுள்ளது.
உடனடியாக அத்துருகியவில் இருந்து துரத்திய அவர் ஒருவாறு ஒருவல பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.
பின்பு தன்னை பாராளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய அவர் காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார்.
#SrilankaNews