br
இலங்கைசெய்திகள்

இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்கும் பிரிட்டன்!!

Share

பிரிட்டன் பாதுகாப்பு பிரிவினர் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்காட்லாந்து போலீசார் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்குவதை ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர்.

எனினும் பிரிட்டன் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க தாம் தயார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி நீதி திட்டத்தின் பணிப்பாளர்,இந்த செய்தி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது .

தனது நடவடிக்கையை தொடர போவதில்லை என ஸ்கொட்லாந்து அறிவித்தபோது அது வலுவான செய்தியை தெரிவித்தது.

ஐக்கிய ராஜ்ஜியம் இலங்கையில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கின்றது என்ற செய்தியையும் தெரிவித்தது.

ஆனால் பிரிட்டனின் இந்த செய்தி கதவுகளை திறந்து உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விலால்பா பிரிட்டனின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

பிரிட்டனின் முந்திய உதவி இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிகரித்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக இலங்கை படையினருக்கு மேலும் பயிற்சிகளை வழங்குவது குறித்து பிரிட்டன் சிந்திப்பது மன்னிக்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...