பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

tamilni 318

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யட்டிகலொலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் மகள் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் நேற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

10ஆம் தரத்தில் கல்வி கற்கும் தனது மகளுடன் இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக மாணவியின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொல்கஹவெல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சந்தேக நபரான காதலனை நேற்று மாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவியும் சந்தேகநபரின் வீட்டில் இருந்த போது பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய காதலனை இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version