24 662c6506bb153
இலங்கைசெய்திகள்

அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு விபரீதம்

Share

அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு விபரீதம்

பொலன்னறுவை – வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (26.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த, ஜயவிக்ரமகம மஹாவலி சிங்கபுர பகுதியினை சேர்ந்த ஜயநாத் பண்டார என்ற 2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அன்னையர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தாய் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன்போது வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை விபத்துக்குள்ளான வேளையில் தந்தை தோட்டத்திற்கு பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளதுடன், மூத்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...