0 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வாகன திருத்தகம் மீது குண்டுவீச்சு!

Share

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றைய தினம் இரவு வீசியுள்ளனர்.
குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வெடி குண்டு உள்ளூர்தயாரிப்பாக இருக்கலாம் என்றும் , அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...