tamilni Recovered 3 scaled
இலங்கைசெய்திகள்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது,,

Share

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித்தகவல் கொடுத்த நபர் கைது,,

கண்டி(Kandy) நீதிமன்ற வளாகத்தில் இன்று(1) வெடிகுண்டு இருப்பதாக 119 காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று(1) வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததையடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து இது தொடர்பான தேடுதல் பணியை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய, கண்டி காவல்துறையினர் கினிகத்தேன காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரான 53 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குறித்த தொலைபேசி தன்னிடம் இருக்கவில்லை எனவும் நேற்று பிற்பகல் குறித்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் பேருந்து நடத்துனராக கடமையாற்றியவர் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பிரதான காவல் பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் காவல்துறையினர் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஜூலை 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...