9 26
இலங்கைசெய்திகள்

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

Share

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றையதினம் (21) மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.

இவர்களை நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைதினம் (21) இவர்கள் மிரிகான எனும் இடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும் காவல்துறையினரும் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மியன்மாரில் (Myanmar) இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த படகு நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது

இந்நிலையில், இன்று (20.12/2024) காலை திருகோணமலை (Trincomalee) துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டன.

பின்னராக மருத்துவ பரிசோதனைகளுக்காக படகிலிருந்து பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 110 நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்திருப்பதுடன் எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இவர்களுக்கான ஆரம்பநிலை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதித்துறையின் கட்டமைப்புக்களுக்கு இணங்க அவர்களுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...