இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

18 2

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மிகக் குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் பதிவாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 301,706 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 220,761 ஆகவும் இருந்தது.

2021 ஆம் ஆண்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2022 இல் 275,321 ஆகவும், 2023 இல் 247,900 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, பதிவுகளின்படி, 2021 முதல் 2024 வரை இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, 2020 இல் இறப்புகளின் எண்ணிக்கை 132,371 ஆகவும், 2021 இல் 163,936 ஆகவும், 2022 இல் 179,792 ஆகவும், 2023 இல் 181,239 ஆகவும், 2024 இல் 171,194 ஆகவும் இருந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின்படி, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 12,066 குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version