tamilni 416 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

Share

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – வஞ்சாவல பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை பெலியத்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

பச்சை நிற கெப் வாகனத்தில் வந்த குழு ஒன்று வெள்ளை நிற டிஃபென்டரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...