6 55
இலங்கைசெய்திகள்

தமிழர் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

மட்டக்களப்பு(batticaloa) கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை(28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டு 23 பரல்களில் 15 இலட்சம் மில்லி லீட்டர் கோடா 5,25,000 லீட்டர் கசிப்பு மற்றும் தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணிக்கும் தோணியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...