பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!
இலங்கைசெய்திகள்

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

Share

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தில், அதிதிகளின் கதிரையை புறக்கணித்து மக்களில் ஒருவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்குபற்றியுள்ளார்.

இதன்போது இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்துகொள்கின்றனர் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே அவர் நேற்றையதினம்(04.08.2023) அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக அந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் அரசு சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஊழல்கள், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் சாணக்கியன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...