இலங்கையில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம்

24 66025d8032988

இலங்கையில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம்

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு சம்பளத்தை 17,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச நாட்கூலியும் 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version