ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மதுபானசாலைகளுக்கு அனுமதி

24 663aa96e0343d

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மதுபானசாலைகளுக்கு அனுமதி

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் ஆதரவுடன் தான் ஆட்சிக்கு வந்தால் உரிமங்கள் வழங்குவது கட்டாயம் நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும். ஊரிமங்கள் தொடர்பாக நீதிமன்றங்களை நாடினால், நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக உரிமங்களை தடை செய்வோம்.

மதுபான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய உணவகம் தொடர்பில் தான் முன்னர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

அது குறித்து மீண்டும் கேள்வி எழுப்புவது குறித்து கவலை தெரிவிக்கிறேன்.” என்றார்.

Exit mobile version