வங்கிக் கடன் வட்டி வீதத்தில் மாற்றம்: இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

24 664322a2953a4

வங்கிக் கடன் வட்டி வீதத்தில் மாற்றம்: இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மொத்தக் கடன் வட்டி வீதத்தை 10 சதவீதமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மொத்த கடன் வட்டி விகிதத்தை 9.92 சதவீதமாக பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் ஒற்றை இலக்கத்தை எட்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்திருந்தார்.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) சுட்டிக்காட்டியிருந்தார்.

Exit mobile version