எதிர்வரும் வாரம் முதல் வங்கிக் கணக்கிற்கு வரப்போகும் பணம்

24 6629e6d9e24f2

எதிர்வரும் வாரம் முதல் வங்கிக் கணக்கிற்கு வரப்போகும் பணம்

எதிர்வரும் வாரம் முதல் விவசாயிகளுக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரு ஹெக்டேருக்கு 15,000 ரூபா நிதி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த விவசாயிகள் தொடர்பான சரியான தகவல்களை திரட்டும் பணி இந்த வாரத்திற்குள் நிறைவடையும்.

இம்மாதப் பருவத்தில் 06 இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இதுவரை 25,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நெல் சாகுபடிக்கு பின் உரம் இடுவதால், நெல் சாகுபடி செய்த பின், நிதி மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version