tamilni 338 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பணத்துடன் இலங்கை திரும்பிய பணிப்பெண்

Share

வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பணத்துடன் இலங்கை திரும்பிய பணிப்பெண்

குவைத் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர், அண்மைக்கால வரலாற்றில் மிகப் பெரிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய, அவர் 2,510,400 இலங்கை ரூபா பெறுமதியான 2,400 குவைத் தினார்களைப் பெற்றுக்கொண்டு நேற்று அதிகாலை இலங்கை வந்துள்ளார்.

காலியை சேர்ந்த 46 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டு குவைத்தில் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார், மேலும் பாடசாலை ஆசிரியரான வீட்டின் உரிமையாளர், அந்தப் பெண்ணை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் என்னை அடிப்பார். இதற்கிடையில், எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.

இதுபற்றி இலங்கையில் உள்ள அம்மாவிடம் தெரிவித்தேன். அதற்கமைய, 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, அம்மா கொழும்புக்கு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கை பணிப்பெண் சம்பந்தப்பட்ட வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வீட்டில் 03 வருடங்கள் 08 மாதங்கள் பணியாற்றிய பெண்ணுக்கு 01 வருடமும் 03 மாதங்களும் சம்பளமே வழங்கப்பட்டது. பின்னர், இந்த முறைப்பாடு இலங்கை தூதரக அதிகாரிகளால் உள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது நிலுவைத் தொகையை வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு வீட்டின் உரிமையாரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதுவரை, இந்தப் பெண் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஜனக சமரசேகரவின் தலையீடு மூலம் தனக்கு மிகப் பெரிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுத்தமை குறித்த வீட்டுப் பணிப்பெண் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெருந்தொகை சம்பள பணத்துடன் நேற்று காலை 06.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

Share
தொடர்புடையது
102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...

fishermen issue
செய்திகள்இலங்கை

வட கடல் ரோந்து: இந்திய மீனவர்கள் உட்பட 35 பேர் கைது – 4 படகுகள் பறிமுதல்!

வட பகுதி கடலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோத...

1761682581
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: ஐவரின் திட்டத்திற்கமைய இடம்பெற்றது அம்பலம் – இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 பேர் சதியில் பங்கேற்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை, ஐந்து பேரின் திட்டத்திற்கமையவே இடம்பெற்றுள்ளமை காவல்துறையினரின் விசாரணைகளில்...

l93320231202120906
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வு: ரிக்டரில் 6.3 ஆக பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று (நவ 03) அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...