இலங்கைக்கு வரும் அரச தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க தடை!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரும் அரச தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க தடை!

Share

இலங்கைக்கு வரும் அரச தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க தடை!

நாட்டிற்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதேவேளை, அவ்வாறான வருகைகள் பற்றிய எந்தவொரு தகவலும் அந்தந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஜூலை 28 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் விஜயம் செய்திருந்தபோது, ஜனாதிபதி செயலக பணியாளர்கள், அவருடன் செல்பி எடுத்தது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பணியாளர்களால் எடுக்கப்பட்ட செல்பிக்களை வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிகாட்டியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...