இலங்கையில் ரக்பி தடை நீக்கம்

rtjy 44

இலங்கையில் ரக்பி தடை நீக்கம்

உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.

ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (04) காலை டுபாயில் இடம்பெற்றது.

இந்நிலையில் உலக ரக்பி சம்மேளனத்தின் இலங்கை ரக்பிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் பெரிஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version