நாளை முதல் இலங்கையில் வரும் தடை

rtjy 311

நாளை முதல் இலங்கையில் வரும் தடை

இலங்கையில் நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை நடைமுறைக்கு வருகின்றது.

ஒரு முறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version