இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

Share
24 660a270d3ed7e
Share

இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள்

அமெரிக்காவில் (America) விபத்துக்குள்ளாகிய இலங்கைவந்த சிங்கப்பூர் (Singapore) சரக்குக் கப்பலில் 764 டொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சரக்கு கப்பலானது, கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று அமெரிக்க பால்டிமோர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருட்கள், அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது இன்னும் தெரிய வராதுள்ள நிலையில் இந்த கப்பலின் அடுத்த பயன திட்டமிடலானது கொழும்பிற்கே (Colombo) விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தென்னாப்பிரிக்காவின் (South Africa) கேப் ஒஃப் குட் (Cape of Good) ஹோப்பைச் சுற்றி, 27 நாட்களை கடத்தி புத்தாண்டுக்குப் பின்னர் கப்பல் இலங்கையை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகள், சுழியோடிகள் பாதுகாப்பற்றவை என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...